/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தலைமுறைகளை தாண்டி சந்தித்த சொந்தங்கள்
/
தலைமுறைகளை தாண்டி சந்தித்த சொந்தங்கள்
ADDED : பிப் 11, 2025 05:15 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டியைச் சேர்ந்த சட்டமுத்து, -அடஞ்சாரம்மாள் தம்பதியின் 5 மகன்கள், 5 மகள்களின் வாரிசுகள் நுாற்றுக்கணக்கானவர்கள் சந்தித்து தங்களது உறவுகளை புதுப்பித்துக்கொண்ட நிகழ்ச்சி நடந்தது.
150 ஆண்டுகளுக்கு முன்பாக உசிலம்பட்டி பகுதியில் வசித்த இத்தம்பதிக்கு மகன்கள் பெரியமுத்து, வீமன், லட்சுமணன், சின்னச்சாமி, நடராஜன் மற்றும் மகள்கள் முத்தம்மாள், பழனியம்மாள், முத்துராமம்மாள், அனந்தம்மாள், சிவகாமியம்மாள் இருந்தனர். இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் 3 முதல் 6வது தலைமுறையினர்கள் தற்போது வசித்து வருகின்றனர். 3 வது தலைமுறையைச் சேர்ந்த பெரியவர்களுக்கு 80 வயதுக்கும் மேலாகியுள்ளது.
இந்த குடும்பத்தினர்களைச் சேர்ந்தவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி உசிலம்பட்டியில் நடந்தது.
குடும்பத்தில் தற்போது உள்ள பெரியோர்கள், இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் என நூற்றுக்கணக்கானவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் அவனிமாடசாமி பங்கேற்று உறவுகளின் அவசியம், ஆரோக்கியமான வாழ்க்கை குறித்து பேசினார். குடும்பத்தினர்களுக்குள் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கினர்.