/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் பகுதியில் நெல் அறுவடை துவக்கம்
/
திருப்பரங்குன்றம் பகுதியில் நெல் அறுவடை துவக்கம்
ADDED : ஜன 19, 2025 05:14 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள மானாவாரி கண்மாய் பகுதிகளில் நெல் அறுவடை துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் நல்ல மழை பெய்ததால் வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி மானாவாரி கண்மாய்களால் அப்பகுதி கிணறுகள், ஆழ் குழாய்களில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் விவசாயிகள் நெல் பயிரிட்டனர். புரட்டாசி மாதம் நெல் நடவு செய்த நிலங்களில் தற்போது நெல் விளைந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றன. விவசாயிகள் பலர் அறுவடையை துவங்கியுள்ளனர்.
அவர்கள் கூறுகையில், ''கிணறுகளில் அதிகளவு தண்ணீர் இருந்ததால் நெல் பயிரிட்டோம். அறுவடைக்கு தயாராகி விட்டது. தற்போது அறுவடை செய்வதில் மகிழ்ச்சி'' என்றனர்.