UPDATED : அக் 22, 2026 04:41 PM
ADDED : அக் 22, 2026 04:36 PM
அ நிறம் | அளவு
மேலுார்:
நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் திருவாதவூரில் இரு திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் பிளாஸ்டிக் சாக்குகளால் மூடி வைக்கப்பட்டிருந்தன.
அப்பகுதி மேய்ச்சல் மாடுகள் சாக்கை சேதப்படுத்தி நெல்லை சாப்பிட்டன. மேலும் தரையில் நெல் கொட்டி வீணாகியது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல்மூடைகள் அனைத்தும் முக்கம்பட்டி வேளாண் துறை கோடவுனிற்கு கொண்டு செல்லப்பட்டன.
