ADDED : நவ 24, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: வேளாண் வணிகத்துறையின் கீழ் உள்ள மதுரை விற்பனைக்குழுவின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 'இ - நாம்' முறையில் மறைமுக ஏலத்தில் நெல் மூடைகள் விற்கப்பட்டன.
மறைமுக ஏலத்தின் மூலம் அட்சயா சன்ன ரக 210 நெல் மூடைகள் ரூ.4.68 லட்சத்திற்கு விற்கப்பட்டு விவசாயியின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஒரு கிலோ நெல் அதிகபட்சமாக ரூ.36.92க்கு விற்கப்பட்டது.
தற்போது நெல் அறுவடை பணிகள் நடப்பதால் விவசாயிகள் நெல் மூடைகளை 'இ - நாம்' மறைமுக ஏலத்தில் விற்று கூடுதல் லாபம் ஈட்டலாம் என விற்பனைக் குழு செயலாளர் அம்சவேணி தெரிவித்தார். மேற்பார்வையாளரை 93847 43940ல் தொடர்பு கொள்ளலாம்.

