/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல் கொள்முதல் மையங்களில் 'துாங்கும்' துாற்றும் இயந்திரம்
/
நெல் கொள்முதல் மையங்களில் 'துாங்கும்' துாற்றும் இயந்திரம்
நெல் கொள்முதல் மையங்களில் 'துாங்கும்' துாற்றும் இயந்திரம்
நெல் கொள்முதல் மையங்களில் 'துாங்கும்' துாற்றும் இயந்திரம்
ADDED : மே 15, 2025 02:16 AM
வாடிப்பட்டி; வாடிப்பட்டி தாலுகாவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கிராமங்களில் நெல் கொள்முதல் மையங்கள் செயல்படுகின்றன. பல மையங்களில் விவசாயிகளிடமிருந்து பெறும் நெல்லை, துாற்றும் இயந்திரம் மூலம் துாசி அகற்றாமல் மூடை போடுகின்றனர். சில இடங்களில் மையம் நடத்த அனுமதி பெற்றவர் 'சப் கான்ட்ராக்ட்' விடுகிறார். இதனால் விவசாயிகளிடம் மூடைக்கு கட்சியினர் தலையீட்டால் ரூ.50 முதல் ரூ.60 வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
வாடிப்பட்டி நீரேத்தான் மையத்தில் விக்கிரமங்கலம் பகுதி வியாபாரிகள் நெல் அதிகளவில் வாங்குவதாகவும், துாற்றும் இயந்திரம் பயன்படுத்துவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறு விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி சேமித்து வைத்து கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு வியாபாரிகள் விற்கின்றனர். நெல்லை சுத்தம் செய்யாமல் மூடை போடுவதால் சற்று லாபம் கூடும். ஆனால் ரேஷன் அரிசியாக வரும்போது தரமற்றதாக இருக்கும். அரசு மீது புகார்கள் குவியும் என சிறு விவசாயிகள் தெரிவித்தனர்.