/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செல்லம்பட்டியில் நெல் விளைச்சல் குறைவு
/
செல்லம்பட்டியில் நெல் விளைச்சல் குறைவு
ADDED : பிப் 23, 2024 06:22 AM

உசிலம்பட்டி,: திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் தாமதமாக திறந்ததால் செல்லம்பட்டி பகுதியில் நெல் விளைச்சல் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
செல்லம்பட்டி ஒன்றியத்தில் 20 ஆயிரம் ஏக்கர் திருமங்கலம் பிரதான கால்வாய் பாசனம் மூலம் நெல் விவசாயம் நடக்கிறது. இந்த முறை தண்ணீர் திறப்பில் தாமதம் ஏற்பட்டதால் முன்னதாக கிணற்று பாசன உதவியுடன் நெல் நடவு செய்தவர்களுக்கு விளைச்சல் குறைந்துள்ளது.கொடிக்குளம் பாண்டி: கரிசல்பட்டியில் உள்ள மூன்றரை ஏக்கர் நிலத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 122 மூடை நெல் விளையும். இந்தாண்டு பெருவட்டு 404 ரக நெல் பயிரிட்டுள்ளேன். கால்வாயில் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பெரும்பாலான நாட்கள் கிணற்று நீர் பாய்ச்ச வேண்டியதாகிவிட்டது.
இருந்த போதும் ஏக்கருக்கு 10 மூடை வரையில் விளைச்சல் குறைந்துள்ளது. 80 மூடை வரையில்தான் விளைச்சல் ஏற்பட்டுள்ளது.
சன்ன ரக நெல்லை தனியார் ஆலைக்கு நேரிடையாக வாங்கிச்செல்கின்றனர்.
பெருவட்டு ரகங்களை அரசு நெல் கொள்முதல் மையங்களுக்குத்தான் கொண்டு செல்கிறோம்.
இந்த ஆண்டு விளைச்சலில் குறைவு ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.