ADDED : நவ 20, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உலக மரபு வார விழாவை முன்னிட்டு திருமலை நாயக்கர் மகாலில் நவ.27 ல் ஓவியப்போட்டி நடக்க உள்ளது.
மதுரை மாநகராட்சியில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தலைமை ஆசிரியரின் அனுமதி கடிதத்துடன் கலந்து கொள்ளலாம். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பாக பாராட்டுச் சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கப்படும். பங்குபெறும் மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 99404 09514 என்ற வாடஸ் ஆப் எண்ணிற்கு தங்களது பெயர், வகுப்பு மற்றும் பள்ளியின் பெயர் உள்ளிட்ட விபரங்களை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.

