/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கள்ளழகர் வாகனங்கள் வண்ணம் தீட்டும் பணி
/
கள்ளழகர் வாகனங்கள் வண்ணம் தீட்டும் பணி
ADDED : மே 03, 2025 05:01 AM

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழாவுக்காக வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் நடுவே எழுந்தருளும் சிறப்பு மிக்க தங்கக்குதிரை வாகனத்தை தயார் செய்யும் பணி நடக்கிறது.
சித்திரை திருவிழா மே 8 முதல் மே 17வரை நடைபெறும். மே 12ல் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்திலும், மே 13ல் வீரராகவ பெருமாள் கோவிலில் ஷேச வாகனத்திலும்,மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்க கருட வாகனத்திலும் எழுந்தருள்வார்.
இம்மூன்று வாகனங்களும், கள்ளழகர் கோலத்தில் மலையில்இருந்து புறப்படும் பல்லக்கும் விசேஷமானவை. இவை ஆண்டுக்கு ஒரு முறை திருவிழாவுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். பின்பு கள்ளழகர்கோயில் வாகன அறைகளில் வைக்கப்படும்.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு இந்தாண்டு வாகனங்களுக்கு பாலிஷ் செய்யும் பணி நிறைவடைந்தது. தொடர்ந்து வாகனங்களை அழகுபடுத்துவதற்காக முகம், கால் பாகம், நகைகள் என அனைத்து பகுதியிலும் வண்ணம் தீட்டி, நாமம் வரையும் பணி தொடங்கி நடக்கிறது.மே 8ல் தங்கக் குதிரை வாகனம் அலங்கரிக்கபட்டு தீபாராதனை, பூஜைக்குப்பின் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு புறப்படும்.