நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் மருதுபாண்டியர் தெரு ஆனந்த விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜை நேற்று நடந்தது.
யாக பூஜை முடிந்து, மூலவருக்கு அபிஷேகங்கள், தீபாராதனை முடிந்து, வரைபடத்தில் மூலவரின் சக்தி கலையேற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் துவங்கியது. ஆனந்த விநாயகர் மகளிர் சபா நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

