/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாலமேடு ஜல்லிக்கட்டு கார், டிராக்டர் பரிசு
/
பாலமேடு ஜல்லிக்கட்டு கார், டிராக்டர் பரிசு
ADDED : ஜன 12, 2025 04:33 AM
பாலமேடு :  பாலமேட்டில் ஜன.15ல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
நேற்று கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டியில் நிர்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் தலைவர் மச்சவேல் தலைமையில் நடந்தது. செயலாளர் பிரபு, பொருளாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர்.
கமிட்டியினர் கூறியதாவது:
சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாகடிராக்டர், 2ம் பரிசாக இரு கார்கள் மற்றும் 3ம் பரிசுகளாக கன்றுடன் கூடிய நாட்டுப் பசு, டூவீலர்கள், பீரோ, கட்டில், சைக்கிள்தங்கக் காசு, விலை உயர்ந்த வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும். டோக்கன் நம்பர் வரிசையில் காளைகள் அவிழ்த்து விடப்படும்.
பேரூராட்சி நிர்வாக ஒத்துழைப்புடன் காலரிகள்கூடுதலாக அமைத்துள்ளோம். காளைகள் அதன் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் அனுமதித்த நேரத்திற்குள் பதிவு செய்த அனைத்து காளைகளை அவிழ்க்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

