/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாலமேடு ஜல்லிக்கட்டு அழைப்பிதழ் வழங்கல்
/
பாலமேடு ஜல்லிக்கட்டு அழைப்பிதழ் வழங்கல்
ADDED : டிச 08, 2024 04:55 AM

பாலமேடு, : பாலமேட்டில் 2025 ஜன.15ல் ஜல்லிகட்டு நடக்கிறது. இதை சிறப்பாக நடத்துவது குறித்து கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்தில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கிராமத்தினர் ஒப்புதலோடு கமிட்டி நிர்வாகிகள் நேற்று காலை வலையபட்டி மஞ்சமலை சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து ஜல்லிக்கட்டு அழைப்பிதழை வைத்து வழிபட்டனர்.
பின் போட்டி நடைபெறும் மஞ்சமலை ஆற்று திடல் வாடிவாசலில் பூஜை செய்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டி அழைப்பிதழ், துண்டு பிரசுரங்கள் வழங்கி பணிகளை துவங்கினர். இதில் கமிட்டி தலைவர் மச்சவேல், செயலாளர் பிரபு, பொருளாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் தேவராஜ், சரவணன், சேகர், குணசேகர், நிதிஷ்குமார், மணி, கந்தசாமி, விஜயகுமார் பங்கேற்றனர்.