/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழகத்தில் பழனிசாமி அலை உதயகுமார் பெருமிதம்
/
தமிழகத்தில் பழனிசாமி அலை உதயகுமார் பெருமிதம்
ADDED : ஜூலை 14, 2025 02:30 AM
மதுரை: 'தமிழகம் முழுவதும் பழனிசாமியின் அலை வீசுகிறது' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தமிழகம் முழுவதும் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' எனும் பேரணி நடத்தி வருகிறார். மதுரையில் இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து குன்னத்துாரில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
உதயகுமார் பேசியதாவது: பொதுச் செயலாளர் பழனிசாமி நடத்தும் பேரணிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் திரண்டு ஆதரவளிக்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் நடக்கும் இன்னல்களை மக்கள் பகிர்கின்றனர்.
தமிழகம் முழுவதும் பழனிசாமியின் அலை வீசுகிறது. மதுரைக்கு அவர் வரும் போது பெரிய வரவேற்பை அளிக்க வேண்டும். சுற்றுப்பயணத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் தான் அதிக மக்கள் திரண்டு வரவேற்றனர் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும் என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம், மாநில நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், வெற்றிவேல், மாவட்ட நிர்வாகிகள் முருகன், தமிழ்ச்செல்வன், திருப்பதி, உஷா உடன் இருந்தனர்.