/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செங்கல் சூளைக்காக அழியும் பனை மரங்கள்
/
செங்கல் சூளைக்காக அழியும் பனை மரங்கள்
ADDED : ஜூன் 02, 2025 01:06 AM
பேரையூர்: 'பேரையூர் தாலுகாவில் செங்கல் சூளைக்காக பனை மரங்கள் வெட்டி அழிக்கப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
பேரையூர் தாலுகாவில் பேரையூர், தும்மநாயக்கன்பட்டி, எஸ்.கீழப்பட்டி, சந்தையூர், எஸ்.மேலப்பட்டி சாப்டூர், வண்டாரி பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.
பனைமர பொருட்களால் மக்களுக்கு ஏராளமான பயன்கள் கிடைக்கின்றன. இப்பகுதியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் பனைமரங்களை நம்பியே தொழில் செய்கின்றன.
இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்படுகின்றன. இந்தச் சூளைகளில் செங்கல்களை வேகவைக்க எரிபொருளுக்கு பனை மரங்கள் வெட்டி அழிக்கப்படுகின்றன. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
முறையான அனுமதி இன்றி பனை மரங்களை வெட்டி அழித்து வருகின்றனர்.
ஒரு மரத்திற்கு ரூ.300 வரை விலை பேசி வெட்டப்படுகிறது. அனுமதி இன்றி பனை மரங்கள் வெட்டுவதை கிராம உதவியாளர்கள், வி.ஏ.ஓ, ஆர்.ஐ உள்ளிட்டோர் கண்காணித்து தடுக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் பனை மரங்களை அழிவில் இருந்து காக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.