/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிதி குறைக்கப்பட்டதால் அல்லாடும் ஊராட்சிகள்
/
நிதி குறைக்கப்பட்டதால் அல்லாடும் ஊராட்சிகள்
ADDED : ஜூலை 09, 2025 06:56 AM
பேரையூர் : ஊராட்சிகளுக்கான மானிய நிதி குறைவாக வழங்குவதால் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, சேடபட்டி யூனியங்களில் 73 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு நிதி வழங்கப்படுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சியை பொறுத்து இந்த நிதி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ. ஒரு லட்சம் வரை வழங்கப்பட்டு வந்தது. ஊராட்சி தலைவர்கள் இருந்தவரை வழங்கப்பட்டு வந்த இந்த நிதி தற்போது ஊராட்சிக்கு ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக வழங்கப்படுவதால் அடிப்படை வசதிகளை செய்ய முடியாமல் ஊராட்சி செயலர்கள் திணறி வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது. மாதாந்திர பராமரிப்பு நிதியை வைத்து குடிநீர் மோட்டார் இயக்குபவர்களுக்கு சம்பளம், ஆதிதிராவிட மக்களுக்கான ஈமக்கரியை நிதி ரூ.5 ஆயிரம் வழங்குதல், தெருவிளக்கு, குடிநீர் மோட்டார், பைப் லைன் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன. குறைந்த அளவு நிதி ஒதுக்கப்படுவதால் பணிகள் செய்ய முடியாமல் திணறி வருகிறோம் என்றனர்.