
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே அய்யூரில் செல்வ விநாயகர், கரந்தமலை, செல்லாயி அம்மன், மண்டு கருப்பண சுவாமி, அய்யனார் சப்த கன்னிமார்கள் கோயிலில் பங்குனி உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது.
முதல் நாள் பொங்கல் வைத்து அய்யனார் சுவாமிக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும், 2ம் நாள் செல்லாயி அம்மன் கோயிலில் பக்தர்கள் கிடா வெட்டி, பொங்கல் வைத்தும் வழிபட்டனர். மூன்றாம் நாள் அய்யனார் சுவாமி குதிரை எடுப்பு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.சுவாமி, அம்மன் பூஞ்சோலை அடைந்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

