/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிரிப்பையே பதிலாக தந்த பன்னீர்செல்வம்
/
சிரிப்பையே பதிலாக தந்த பன்னீர்செல்வம்
ADDED : நவ 09, 2025 05:50 AM
அவனியாபுரம்: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தேனி செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார்.
அவரிடம், செங்கோட்டையன் பின்னணியில் தி.மு.க., செயல்படுவதாக தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது குறித்த கேள்விக்கும், 'அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க வேண்டும் என பா.ஜ.,தான் கூறியது. தற்போது என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டனர்' என செங்கோட்டையன் கூறியுள்ளது குறித்தும் கேட்ட கேள்விகளுக்கு பன்னீர்செல்வம் பதில் அளிக்காமல் சிரித்தார்.
'நீங்களும் தி.மு.க.,வில் இணைவதாக தகவல் வருகிறதே' என்ற கேள்விக்கு, 'வதந்திதானே' என்றார்.
'கோயில் (மதுரை) நகரம் குப்பை நகரமாக மாறி விட்டது.
அசுத்தமான நகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடம் பிடித்துள்ளதே' என கேட்டதற்கு, 'ஆளுங்கட்சியிடம்தான் கேட்க வேண்டும்' என சிரித்துக் கொண்டே கூறிச்சென்றார்.

