/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எழும்பூரில் சீரமைப்பு பணி தாம்பரத்துடன் ரயில் நிற்கும்
/
எழும்பூரில் சீரமைப்பு பணி தாம்பரத்துடன் ரயில் நிற்கும்
எழும்பூரில் சீரமைப்பு பணி தாம்பரத்துடன் ரயில் நிற்கும்
எழும்பூரில் சீரமைப்பு பணி தாம்பரத்துடன் ரயில் நிற்கும்
ADDED : நவ 09, 2025 05:50 AM
மதுரை: சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சீரமைப்பு பணிகளால் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பகுதி ரத்து: நவ., 10 (நாளை) முதல் 29 வரை, கொல்லம் - எழும்பூர் 'அனந்தபுரி' (20636), ராமேஸ்வரம் - எழும்பூர் 'சேது' (22662), ராமேஸ்வரம் - எழும்பூர் (16752), தஞ்சை - எழும்பூர் 'உழவன்' (16866) ஆகிய ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். தாம்பரம் - எழும்பூர் இடையே இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
புறப்படும் இடம் மாற்றம்: நவ., 11 முதல் 30 வரை, ராமேஸ்வரம் 'சேது' ரயில் (22661) மாலை 6:20 மணிக்கு, ராமேஸ்வரம் ரயில் (16751) இரவு 7:42 மணிக்கு, கொல்லம் 'அனந்தபுரி' ரயில் (20635) இரவு 8:20 மணிக்கு, தஞ்சை 'உழவன்' ரயில் (16865) இரவு 11:00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.அடுத்த அறிவிப்பு வரும் வரை குருவாயூர் - எழும்பூர் - குருவாயூர் தினசரி ரயில்கள் (16127/16128), தாம்பரத்துடன் நிறுத்தப்பட்டு மறுமார்க்கத்தில் அங்கிருந்து காலை 10:47 மணிக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

