/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாப்பிநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி
/
பாப்பிநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி
ADDED : ஏப் 11, 2025 05:45 AM

எழுமலை: எழுமலை பாப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், டி.எஸ்.பி., சந்திரசேகர், கால்நடை, மருத்துவத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், கிராம மக்கள் இணைந்து நடத்தினர். சிறப்பு விருந்தினர்களாக ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன், எம்.எல்.ஏ., அய்யப்பன் பங்கேற்றனர்.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் பகுதிகளில் இருந்து 625 காளைகள், 420 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மதியம் 3:30 மணி வரை நடந்த போட்டியில் 576 காளைகள் களத்தில் இறக்கின.
வென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கிராம கமிட்டி சார்பில் பீரோ, கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. 51 பேர் காயமடைந்தனர்.