/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பராசக்தி பள்ளிக்கு பெற்றோர் பாராட்டு
/
பராசக்தி பள்ளிக்கு பெற்றோர் பாராட்டு
ADDED : மே 12, 2025 05:57 AM
பேரையூர்: பேரையூர் தாலுகா எஸ்.கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
மாணவிகள் தாரணி 571. ரக்ஷணா வைஷ்ணவி 568. சவுமியா 568. முகமது தனிஷ்க் 565. கனிஅமுதா 565, பயாலஜியில் 20 மாணவர்கள் உட்பட 40 மாணவர்கள் பாடவாரியாக 'சென்டம்' பெற்றனர். இவர்களை பள்ளித் தாளாளர் ஜெகதீசன் பாராட்டினார். கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பிளஸ் 2 தேர்வில் சென்டம் அடித்து சாதனை படைத்ததால் பள்ளித் தாளாளர் ஜெகதீசன் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை, பள்ளி முன்னாள் மாணவர்கள், பெற்றோர் பாராட்டினர்.
பெற்றோர்கள் கூறுகையில், ''இப்பள்ளி கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. பள்ளியில் படித்த இப்பகுதி மாணவர்களில் பலர் வேலைவாய்ப்பு, தொழிலில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்'' என்றனர்.

