ADDED : நவ 03, 2025 04:28 AM
மதுரை: தமிழ் செம்மொழிக்காக முதன்முதலாக குரல் கொடுத்த சூரிய நாராயண சாஸ்திரி (பரிதிமாற் கலைஞர்) நினைவு தினம் விளாச்சேரியிலுள்ள அவரது நினைவிடத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் பிரவீன் குமார், ஆர்.டி.ஒ. கருணாகரன், தாசில்தார் முத்துப்பாண்டியன், ஆர்.ஐ. ஆனந்த், வி.ஏ.ஓ. காமேஸ்வரன், பி.டி.ஓ., அழகுபாண்டி, ஊராட்சி செயலாளர் ராஜமாணிக்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பக்தவச்சலம் தலைமையில் மரியாதை செலுத்தினர். மண்டல தலைவர் இல.அமுதன் மாலை அணிவித்தார்.
இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் கோதண்ட ராமன், முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேஷ், ஜெய்ஹிந்த்புரம் முன்னாள் தலைவர் பிச்சுமணி, நிர்வாகிகள் வெங்கடாசலம், ரமேஷ் பங்கேற்றனர்.
திருநகர்:: பா.ஜ.: அணிவித்தார்.: தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தொகுதி தலைவர் முருகன் தலைமையில் இப்ராஹிம், முனியாண்டி, ராமர் மாலை அணிவித்தனர்.
தாம்ப்ராஸ் மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ தலைமையில் பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார், பொருளாளர் நடராஜன், மகளிர் அணி செயலாளர் உமாகுமார், கிளை பொருளாளர் பெரியசாமி மாலை அணிவித்தனர்.
ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் அண்ணாமலை, காளிதாசன், அரவிந்தன், பாஸ்கர், பாண்டி ரவிச்சந்திரன் மாலை அணிவித்தனர்.

