/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடிநீர் தொட்டியில் கட்சிக் கொடிகள்
/
குடிநீர் தொட்டியில் கட்சிக் கொடிகள்
ADDED : நவ 03, 2025 04:28 AM
சோழவந்தான்: சோழவந்தான் ஊரகப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பல மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் கட்சி, சாதி கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.
இங்கு பல ஊர்களில் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் 12 மீ., உயரமான மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. விஷமிகள் சிலர் இதன் மீது ஏறி சாதி, அரசியல் கட்சி அடையாளங்களை வரைதல், கொடிகளை பறக்க விடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால் தொட்டியின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன், மேலே ஏறும் போது தவறி விழுந்து விபரீதம் விளையவும் வாய்ப்புள்ளது. சில நாட்களுக்கு முன்பு கருப்பட்டி அருகே அம்மச்சியாபுரத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கிடந்த பிரச்னை பெரிதாகி சமூக அமைதி சீர்குலைந்தது. இது போன்ற செயல்கள் நடப்பதற்கும் வாய்ப்புள்ளது. அரசியல் அழுத்தத்தால் அதிகாரிகள் கொடிகளை அகற்ற முன்வருவதில்லை. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

