/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயன்பாடின்றி வீணாகும் பூங்கா, உடற்பயிற்சி கூடம்
/
பயன்பாடின்றி வீணாகும் பூங்கா, உடற்பயிற்சி கூடம்
ADDED : ஆக 11, 2025 04:31 AM

வாடிப்பட்டி: மதுரை மேற்கு ஒன்றியம் கோவில்பாப்பாகுடி ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் பராமரிப்பு இன்றி வீணாகிறது.
இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 6 ஆண்டுகளுக்கு முன் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. நவீன உடற்பயிற்சி உபகரணங்கள், நடைப்பயிற்சி தளங்கள், சுகாதார வளாகம் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. தற்போது உடற்பயிற்சி கூடத்தில் பழுதான குப்பை சேகரிக்கும் எலக்ட்ரிக் ஆட்டோக்களை நிறுத்தி உள்ளனர்.
பூங்காவில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி துருப்பிடித்து நிதி வீணடிக்கபட்டுள்ளது. மதுரை நகரை ஒட்டிய இந்த ஊராட்சி நிர்வாகம், விரிவாக்க பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.