ADDED : நவ 03, 2024 04:27 AM

திருநகர்: தமிழ் செம்மொழிக்கு முதலில் குரல் கொடுத்தவர் சூரிய நாராயண சாஸ்திரி (பரிதிமாற் கலைஞர்). அவரது நினைவு தினத்தை முன்னிட்டு விளாச்சேரி நினைவிடத்திலுள்ள அவரது சிலைக்கு பேரன் கோவிந்தன், கணபதி, வெங்கட சுந்தரம், டி.ஆர்.ஓ., சக்திவேல், தாசில்தார் செண்பகவல்லி, ஊராட்சி தலைவர் முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் மாவட்டம், கிளைகள் சார்பில் மாவட்ட தலைவர் ரவி, செயலாளர் ஸ்ரீராமன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட கிளைத் தலைவர்கள் கண்ணன், ஜனார்த்தனன், முத்து கிருஷ்ணன், சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை தாம்பிராஸ் சார்பில் இல.அமுதன், நரசிம்மன், ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்ற நிர்வாகிகள் அய்யல்ராஜ், அண்ணாமலை, வேட்டையார், அரவிந்தன், ரவிச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.