/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கட்சி பேனர் மாறியது; எதிர்ப்பு கிளம்பியது
/
கட்சி பேனர் மாறியது; எதிர்ப்பு கிளம்பியது
ADDED : ஜன 07, 2025 05:02 AM
உசிலம்பட்டி: பா.பி., மாநில பொதுச்செயலாளர் பதவி வகிப்பது யார் என்பதில் முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், திருப்பூர் பா.பி., நிர்வாகி கர்ணன் ஆகியோருக்கிடையே போட்டி நிலவுகிறது. இரு அணிகளாக செயல்படுகின்றனர்.
இந்நிலையில் உசிலம்பட்டியில் இந்திய மக்கள் பா.பி., கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அனுமதி பெற்றிருந்தனர்.
ஆனால், நிகழ்ச்சியை அகில இந்திய பா.பி., மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் என்ற பேனருடன் நடத்தினர். இதில் பா.பி., கர்ணன் தரப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு வந்த கதிரவன் தரப்பு ஆதரவாளர்கள் 'பா.பி., பெயர் உள்ள பேனரை எடுத்து விட்டு கூட்டம் நடத்துங்கள்' என எதிர்ப்பை தெரிவித்தனர்.
அவர்களிடம் போலீசார், 'உங்கள் கட்சிப்பிரச்னைகளை உரிய இடத்தில் புகார் தெரிவித்து தீர்வு காணுங்கள்' என சமாதானப்படுத்தி அனுப்பினர்.