/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை - ஷாலிமார் இடையே 'அம்ரித் பாரத்' இயக்கப்படுமா பயணிகள் எதிர்ப்பார்ப்பு
/
மதுரை - ஷாலிமார் இடையே 'அம்ரித் பாரத்' இயக்கப்படுமா பயணிகள் எதிர்ப்பார்ப்பு
மதுரை - ஷாலிமார் இடையே 'அம்ரித் பாரத்' இயக்கப்படுமா பயணிகள் எதிர்ப்பார்ப்பு
மதுரை - ஷாலிமார் இடையே 'அம்ரித் பாரத்' இயக்கப்படுமா பயணிகள் எதிர்ப்பார்ப்பு
ADDED : டிச 04, 2025 07:01 AM
மதுரை:மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் - மதுரை இடையே 'அம்ரித் பாரத்' ரயில் இயக்க வேண்டும்என பயணிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.
மதுரை உட்பட தென்மாவட்டங்களில் இருந்து ஒடிசா, மேற்கு வங்கம் செல்ல கன்னியாகுமரி - ஹவுரா வாராந்திர ரயில் மட்டுமே உள்ளது. அதை தவிர்த்தால் சென்னை சென்று அங்கிருந்து செல்லும் நிலையுள்ளது. எனவே மதுரையில் இருந்து கிழக்கு கடற்கரையோர முக்கிய நகரங்களுக்கு செல்லும் வகையில் கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை எழுந் தது.
இந்நிலையில், மதுரையில் இருந்து ஷாலிமார் இடையே தினமும் அம்ரித் பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு அதற்கான உத்தேச கால அட்டவணை வெளியானது. தினமும் மாலை 5:50 மணிக்கு ஷாலிமாரில் இருந்து புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 6:30 மணிக்கு மதுரை வரும் வகையிலும், மறு மார்க்கத்தில் இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 9:15 மணிக்கு ஷாலிமார் செல்லும் வகையிலும் திட்டமிடப்பட்டது.
திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், விஜயவாடா, ராஜமுந்திரி, துவ்வாடா, விசாகப்பட்டணம், புவனேஸ்வர், பத்ரக், பாலசோர், காரக்பூர், சாந்த்ராகாச்சி வழியாக இயக்க திட்டமிடப்பட்டது. 2138.7 கி.மீ., துாரத்தை அதிகபட்சம் 36 மணி நேரம் 40 நிமிடங்களில் கடக்கும் வகையில் இயக்க பரிந்துரைக்கப்பட்டது.
எனினும் பல மாதங்களாகியும் இதற்கான பரிந்துரை கிடப்பில் உள்ளது.கடந்த செப்., 25 முதல் ஈரோடு - பீகார் மாநிலம் ஜோக்பானி இடையே தமிழகத்திற்கான முதல் அம்ரித் பாரத் ரயில் இயங்கி வருகிறது. அதுபோல் மதுரை - ஷாலிமார் இடையே ஏற்கனவே பரிந்துரைத்தபடி அம்ரித் பாரத் ரயில் இயக்க பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

