/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வலுவான அமைச்சர் வலுவாக பணத்தை இறக்குவார் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ சந்தேகம்
/
வலுவான அமைச்சர் வலுவாக பணத்தை இறக்குவார் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ சந்தேகம்
வலுவான அமைச்சர் வலுவாக பணத்தை இறக்குவார் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ சந்தேகம்
வலுவான அமைச்சர் வலுவாக பணத்தை இறக்குவார் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ சந்தேகம்
ADDED : டிச 04, 2025 06:07 AM
வாடிப்பட்டி: 'வலுவான அமைச்சராக உள்ள மூர்த்தி, தேர்தலிலும் வலுவாக பணத்தை இறக்குவார். ஆனால் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என மக்களுக்கு தெரியும்'' என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.
மதுரை துவரிமான் அருகே மேலமாத்துாரில் புதிய அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு திறந்து வைத்தார்.
பின் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க.,தான் ஆட்சிக்கு வரும் என நடிகர் வடிவேலு சொன்னால் நல்லது தான். அதை நாம் காமெடியாகத் தான் எடுத்து கொள்ள வேண்டும். 2011ல் வடிவேலு பேசியபோது மக்கள் சிரித்து மகிழ்ந்தனர். ஓட்டுக்களை எதிர்பார்த்த தி.மு.க., எதிர்கட்சியாகக் கூட வரவில்லை.
சென்னை வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கும் நிலையில் மேயர், துணை முதல்வர், அமைச்சர் உள்ளிட்டோர் தண்ணீர் தேங்கிய பக்கம் செல்லாமல் 'போட்டோ சூட்' நடத்துகின்றனர். நிர்வாகத் திறமை இல்லாத முதல்வரை எளிதாக ஏமாற்றி விடலாம் என நினைப்பதன் வெளிப்பாடே இது.
மேற்கு தொகுதியில் குடியிருப்போர் நலச்சங்கங்களை தற்போதுதான் அமைச்சர் பார்க்கிறார். ஆனால் நான் பத்தாண்டுகளாக அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறேன்.
என்னுடைய எம்.எல்.ஏ.,தொகுதி நிதியில் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத சூழலை அமைச்சர் மூர்த்தி ஏற்படுத்தி உள்ளார்.
அமைச்சர் மூர்த்தி கோயில்கள் முன் கூரை அமைக்கிறார். எங்களை அமைக்க விடுவதில்லை. அமைச்சர் மூர்த்தி வலுவாக இருக்கிறார். தேர்தலின் போது தொகுதியில் பணத்தை இறக்குவார். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும் என்றார்.

