/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயமுறுத்தும் பஸ் ஸ்டாப் படிக்கட்டில் பயணிகள்
/
பயமுறுத்தும் பஸ் ஸ்டாப் படிக்கட்டில் பயணிகள்
ADDED : ஜூலை 27, 2025 04:17 AM

வாடிப்பட்டி: திருப்பரங்குன்றம் ஒன்றியம் கொடிமங்கலம் ஊராட்சியில் பழுதடைந்த பஸ் ஸ்டாப்பில் பயணிகள் அச்சத்துடன் படிக்கட்டில் காத்திருக்கும் பரிதாப நிலை உள்ளது.
இந்த பஸ் ஸ்டாப்பை மதுரைக்கு செல்ல பள்ளி கல்லுாரி மாணவர்கள் கூலி தொழிலாளர்கள் என தினமும் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். 7 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பஸ் ஸ்டாப் பராமரிப்பின்றி சேதமடைய துவங்கியது. மது பிரியர்கள் 'பாராக' ஆக்கிரமித்தனர்.
தற்போது போஸ்டர் ஒட்ட மட்டுமே பயன்படுகிறது. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. முன்பக்க சிலாப்புகளும் பெயர்ந்துள்ளன. கட்டடத்தில் விரிசல் விட்டுள்ளது.
இதனால் பஸ் ஸ்டாப் படிக்கட்டுகளில் பயணிகள் அச்சத்துடன் அமர்ந்துள்ளனர். பஸ் ஸ்டாப்பை பராமரிக்க வேண்டும் அல்லது புதிய பஸ் ஸ்டாப் கட்ட வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
லட்சுமி: பஸ் ஸ்டாப் மேற் பூச்சுகள் விழுவதால் அச்சத்துடன் படிக்கட்டில் அமர்ந்துள்ளோம் இடையூறான பகுதி, உரிய பராமரிப்பு பணி செய்யாததே இதற்கு காரணம். மழை நேரத்தில் ரோட்டில் நிற்கும் நிலை உள்ளது என்றார்.