/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிழற்குடையில் இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதி
/
நிழற்குடையில் இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதி
ADDED : ஆக 04, 2025 05:03 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பேரூராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் இல்லாமல் உட்கார வழியின்றி பயணிகள் வெயில், மழையில் சிரமப்படுகின்றனர்.
இங்கு புதிதாக ரூ.1.50 கோடியில் வணிக வளாகத்துடன் கட்டப்பட்ட அம்பேத்கர் பஸ் ஸ்டாண்ட் ஜன.12ல் திறக்கப்பட்டது.
இந்த பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாகியும், இன்றுவரை சீரமைக்கப்படவில்லை. புதிதாக கட்டிய பஸ் ஸ்டாப்பிலும் இருக்கைகள் வசதி இல்லை. இந்த இரு பஸ் ஸ்டாப்பிலும் இருக்கைகள் இல்லாததால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கின்றனர்.
வயதானவர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் அமர வழியின்றி கால்கடுக்க அவதிப்படுகின்றனர். இருக்கைகள் அமைத்து தர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

