/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புதிய ரோட்டுக்கும் 'பேட்ச் ஒர்க்' ரூ. 2.63 கோடி வீண்
/
புதிய ரோட்டுக்கும் 'பேட்ச் ஒர்க்' ரூ. 2.63 கோடி வீண்
புதிய ரோட்டுக்கும் 'பேட்ச் ஒர்க்' ரூ. 2.63 கோடி வீண்
புதிய ரோட்டுக்கும் 'பேட்ச் ஒர்க்' ரூ. 2.63 கோடி வீண்
ADDED : செப் 05, 2025 04:05 AM

மேலுார்: செம்மினிபட்டியில்ரூ.பல கோடியில் அமைத்த தார் ரோடு முப்பதே நாட்களில் பெயர்ந்ததால், சிமென்ட் கலவையால் கண்துடைப்பாக மராமத்து பணிசெய்வதாக ஒப்பந்ததாரர் மீது புகார் எழுந்துள்ளது.
செம்மினிபட்டி ஊராட்சி முத்துசாமி பட்டி முதல் கரையிபட்டி வரை 5 கி.மீ., தொலைவில் 5 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்காக, 40 நாட்களுக்கு முன் முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 2.69 கோடியில் தார் ரோடு அமைத்தனர்.
ரோடு அமைத்த ஒரே மாதத்தில் ரோட்டோரம் தார் பெயர்ந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. உடனே ஒப்பந்ததாரர் ரோடு பெயர்ந்த பகுதியில் சிமென்ட் கலவையால் சரிசெய்தார். கண்துடைப்பாக பணி நடந்த இடத்தில் மீண்டும் சிமென்ட் கலவை பெயர்கிறது. அதில் வாகனங்கள் செல்வதால் மேலும் புதிதாக தார் ரோடு பெயர ஆரம்பித்துள்ளது.
கிராமச் சாலைகளுக்கான அதிகாரிகள் கண்காணிக்க தவறியதே காரணம். மக்களின் வரிப்பணத்தில் அமைத்த ரோடு ஒரேமாதத்தில் சேதமடைவதால், மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.