
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் அருகே சக்கரப்ப நாயக்கனுாரில் மயானத்திற்கு செல்ல பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
ஆறுமுகம் கூறியதாவது: இங்கு உசிலம்பட்டி மலையிலிருந்து வரும் தெற்கு ஓடை, முனியாண்டி கோயில் ஓடை இரண்டும் சேரும் கால்வாயை தாண்டி மயானம் அமைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக தகன மேடை அமைக்கப்பட்டது. மயானத்திற்கு செல்ல தனிபாதை இல்லை. கால்வாய் பாதையிலேயே செல்கிறோம். மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீர் செல்லும் போது கால்வாயை ஆபத்தான முறையில் கடக்க வேண்டும். மயானத்திற்கு அருகே கால்வாயில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் பாதையில் அதிகளவு தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டுகின்றனர் என்றார்.