UPDATED : அக் 22, 2026 04:58 PM
ADDED : அக் 22, 2026 04:55 PM
அ நிறம் | அளவு
மதுரை: பழநி கட்டுமான தொழிலாளி முனியப்பன் 56, பணியின் போது கட்டடத்தில் இருந்து தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மதுரை அரசுமருத்துவமனையில் கம்பிகள், பிளேட்டுகள் பொருத்தப்பட்டன. உறவினர்கள் கிளம்பியதால் ஆதரவின்றி மருத்துவமனையை விட்டு முனியப்பன் வெளியேறினார். அண்ணா பஸ்ஸ்டாண்ட் பகுதியில் காலில் அழுகிய காயத்தில் ஈக்கள் மொய்த்தபடி மழையில் தவித்துக்கொண்டிருந்தது குறித்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவுக்கு வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பினர். இதையடுத்து மாவட்ட செஞ்சிலுவை சங்க ஆர்வலர்கள் ராஜ்குமார், வழக்கறிஞர் முத்துக்குமார் அவரை மீட்டு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
