ADDED : நவ 21, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரைக்கு டிச.,7ல் வரும் முதல்வர் ஸ்டாலின், பயனாளிகள் ஒரு லட்சம் பேருக்கு பட்டா வழங்க உள்ளார்.
அன்று காலை விமானத்தில் மதுரை வரும் அவர், மேலமடை பகுதியில் ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். இதன்பின் உத்தங்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேருக்கு பட்டா வழங்குகிறார்.
ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி கவனித்து வருகிறார். இதற்கிடையே நாளை (நவ.22) துணை முதல்வர் உதயநிதி மதுரையில் நடக்கும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

