/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீர்நிலையில் கழிவுகள் தடுக்காவிடில் அபராதம்: மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ADDED : மார் 12, 2024 06:30 AM
மதுரை : மதுரை கற்பக நகர் புதுக்குளம் கண்மாயில் குப்பைகளை குவிப்பது, வண்டியூர் கண்மாய்க்கு செல்லும் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்காவிடில் மாநகராட்சிக்கு அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை புதுார் வழக்கறிஞர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு
மதுரை மாட்டுத்தாவணி எதிரே மாநகராட்சி குப்பைக் கிடங்கு மற்றும் மத்திய உளவுத்துறை (ஐ.பி.,) அலுவலகம் இடையே கற்பகம் நகர் அருகே புதுக்குளம் கண்மாயின் ஒரு பகுதி உள்ளது. அதில் குப்பைகள் குவிக்கப்படுகிறது. இதை அகற்ற வேண்டும். சிட்கோ தொழிற்பேட்டை வழியாக செல்லும் கால்வாயில் கழிவு நீர் கலக்கிறது. இது வண்டியூர் கண்மாயை சென்றடைகிறது.
கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை, மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், பி.புகழேந்தி அமர்வு: புதுக்குளம் கண்மாயை 4 மாதங்களில் புனரமைக்க மதுரை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.,பஸ் ஸ்டாண்ட் பின்புறம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை மாநகராட்சி 6 மாதங்களில் முடிக்க வேண்டும்.
வரும்காலங்களில் கழிவுநீர் கலப்பது, குப்பைகளை குவிப்பதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும். தவறினால் மாநகராட்சிக்கு அபராதம் விதிக்கப்படும். நீர்நிலை வழித்தடங்களில் சிறுபாலங்கள் கட்ட அனுமதிக்கும் அரசாணையை மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.