ADDED : ஆக 05, 2026 03:33 AM
அ நிறம் | அளவு
மேலுார்: அட்டப்பட்டியில் 1 முதல் 4 வார்டுகளில் 600 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டது. மோட்டார் பழுதானதால் 7 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகிக்கவில்லை. அதனால் மக்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.12க்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
குடிநீர் பற்றாக்குறையை போக்க விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தும் தண்ணீரை தேடி அலைவதால் குறித்த நேரத்திற்கு பள்ளி, வேலைக்கு செல்ல முடியவில்லை. தண்ணீர் விநியோகிக்காதது குறித்து அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், உடனே மோட்டார் பழுது நீக்கி, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.
