ADDED : ஜூலை 14, 2025 02:33 AM
மதுரை: மதுரை அனுப்பானடியில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தலைவர் ஆறுமுகம் தலைமையில் மாநாடு நடந்தது. துணைத் தலைவர் சீத்தாராமன் வரவேற்றார்.
மாவட்ட இணைச் செயலாளர்கள் நாராயணன், அடைக்கன், பொருளாளர் ஜெயராமன் பேசினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது நிரம்பியவர்களுக்கு ஓய்வூதியத்தில் 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழு உறுப்பினர் ரங்கராஜன் நன்றி கூறினார். செயலாளர் பன்னீர்செல்வம், இணைச் செயலாளர்கள் தமிழ்ச்செல்வி, வளர்மதி, பொருளாளர் ராமன், துணைத் தலைவர்கள் ராமசாமி, ராஜாமணி, மாவட்ட துணைத் தலைவர் தங்கவேலு, செயலாளர் பால்முருகன் பங்கேற்றனர்.