ADDED : ஜூன் 27, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் எச்.எம்.எஸ்., சங்க மதுரை கிளை செயற்குழு கூட்டம் தலைவர் அங்குசாமி தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ஒச்சாதேவன், சுந்தரராஜன், சவுந்தரராஜன், சேதுராமன், கண்ணன் முன்னிலை வகித்தனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி ஓய்வூதிய அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். மினிபஸ்கள் இயக்கத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் வரை நீட்டிக்கக் கூடாது. தொலைதுார பஸ்களை இயக்கும் ஊழியர்களுக்கு சட்டசபை தேர்தலில் தபால் ஓட்டுரிமை வழங்க வேண்டும்.
போக்குவரத்துக் கழகத்தை பாதுகாக்க முதல்வர் சிறப்பு நிதி வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.