ADDED : டிச 04, 2024 08:29 AM

மதுரை : மதுரையில் தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பிச்சைராஜன் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் கோரிக்கைகள் குறித்து விளக்கினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம் துவக்கி வைத்தார்.
நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு 2015 முதல் வழங்காமல் முடக்கி வைத்துள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த அதேநாள் முதல் மாநில ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கும் நிபந்தனையின்றி வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் காசில்லா மருத்துவ காப்பீடு திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன், போக்குவரத்து ஓய்வூதியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் தேவராஜன், மின்வாரிய ஓய்வூதியர் சங்க தலைவர் மாரிசாமி, நிர்வாகிகள் சாலமோன், நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட பொதுச் செயலாளர ரமேஷ்கண்ணன் நிறைவுரையாற்றினார்.