ADDED : ஜூன் 29, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் வட்டக்கிளைக் கூட்டம் இணைச்செயலாளர் பழனி தலைமையில் நடந்தது. அய்யங்காளை வரவேற்றார்.
மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் ஜெயராமன், மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் ஒருங்கிணைப்பாளர் செல்வம், வட்டக் கிளை நிர்வாகிகள் மகேஸ்வரன், மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தி.மு.க., தேர்தல் அறிக்கைப்படி பழைய ஓய்வூதியம், ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊர்புற நுாலகர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும், உசிலம்பட்டியில் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கலைக்கல்லுாரி துவக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ் நன்றி கூறினார்.