திருமங்கலம் : திருமங்கலம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஓய்வூதியர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. ஓய்வூதியர்களின் தந்தை என போற்றப்படும் நெக்ரா படத்திற்கு துணைத் தலைவர் பழனிராஜ், ஆலோசகர் வெங்கட கிருஷ்ணன், செயலாளர் ரகுநாதன், இணைச் செயலாளர் நடராஜன், பொருளாளர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்தனர்.
மேலுார்: அனைத்து துறை ஓய்வூதியர்கள் நலச்சங்க அலுவலகத்தில் ஓய்வூதியர் தின நாள் தலைவர் தமிழையா தலைமையில் நடந்தது.
செயல் தலைவர் மணி, கவுரவ தலைவர்கள் துரைப்பாண்டியன், வீரன், பொருளாளர் ஆதி சிவன் ஓய்வூதியம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் பிறப்பித்த உத்தரவு பற்றியும், ஓய்வூதிய தின நாள் குறித்தும் பேசினர்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் எடுத்த நடவடிக்கை, அதனால் பலனடைந்தோர் பற்றி பேசினர். செயலாளர் ஸ்ரீகண்டன் நன்றி கூறினார்.