/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
/
மதுரை மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 12:53 AM

மதுரை: எழுபது வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகாக்களில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி 3 சதவீத உயர்வை ஜூலை 1 முதல் தமிழக அரசும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7850 ஓய்வூதியமாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட குறைபாடுகளை களைய வேண்டும். கம்யூட்டேஷன் பிடித்த காலத்தை 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கலெக்டர் அலுவலக வளாகம் மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு மாவட்ட துணைத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் கோரிக்கையை விளக்கினார். மாநில தலைவர் ஜெயச்சந்திரன், வட்டக்கிளை நிர்வாகிகள் வெள்ளைக்கண், நாகேஸ்வரன், நாராயணன், மாநில நிர்வாகிகள் பரமேஸ்வரன், திருவேங்கடராவ், தமிழ் பேசினர். இணைச் செயலாளர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.
n திருமங்கலத்தில் கிளைத் தலைவர் கண்ணன் தலைமையில் நடந்தது. செயலாளர் கணேசன், நிர்வாகிகள் சொக்கலிங்கம், பாஸ்கரன், ராஜேந்திரன், ராஜசேகரன், சத்தியமூர்த்தி, கிருஷ்ணன் உட்பட பலர் பேசினர்.
n உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்க நிர்வாகிகள் பழனி, அய்யங்காளை, அருண்பாண்டி, பெரியகருப்பன், ராசையா, ஆதாரமிளகி, ஜெயராஜ் பங்கேற்றனர்.
n வாடிப்பட்டி தாலுகா அலுவலக முன்பு கிளைத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுந்தர், வேல்மயில், பானு, பொருளாளர் பாண்டியம்மாள், சுந்தர லட்சுமி பங்கேற்றனர்.
n திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் கிளைத் தலைவர் தனபாண்டியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா, செயலாளர் பன்னீர்செல்வம், எல்.ஐ.சி. ஓய்வூதியர் சங்க நிர்வாகி சந்திரசேகரன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநில பொருளாளர் விஜயபாஸ்கர், நாராயணன், நடராஜன் பங்கேற்றனர்.
n பேரையூர் கருவூலம் முன்பு கிளைத் தலைவர் பெருமாள்ராஜா தலைமையில் நிர்வாகிகள் தினகரசாமி, அன்னகுமார், ராஜூ, ராஜாங்கம் பங்கேற்றனர்.

