
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஆஸ்டின் பட்டியில் சென்னை வருமான வரித்துறையின் புலனாய்வு இயக்குனரகம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
மத்திய அரசின் 'ஸ்வச் பாரத் மிஷன்' திட்டத்தின் கீழ் வருமான வரித் துறையின் டைரக்டர் ஜெனரல் பிரதாப்சிங், முதன்மை இயக்குனர் கருண்காந்த் ஓஜா மரக்கன்றுகளை நட்டனர். ஆஸ்டின்பட்டி, வேடர்புளியங்குளம், மாடக்குளம் பகுதிகளில் இதுவரை 2500 மரக்கன்றுகள் நடப் பட்டுள்ளன. கூடுதல் இயக்குனர் மைக்கேல் ஜெரால்டு, இணை கமிஷனர் சுரேஷ் குடரி உட்பட பலர் பங்கேற்றனர்.

