தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கலங்கல் குடிநீரால் கலங்கும் பொதுமக்கள்

கலங்கல் குடிநீரால் கலங்கும் பொதுமக்கள்

கலங்கல் குடிநீரால் கலங்கும் பொதுமக்கள்


UPDATED : நவ 01, 2026 11:58 PM

ADDED : நவ 01, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 11:58 PM ADDED : நவ 01, 2026 06:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடை போக்கும் வகையில் வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் 2003 ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வைகை நீர் சுத்திகரிக்கப்பட்டு சேடப்பட்டி, டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள், பேரையூர், டி.கல்லுப்பட்டி, ஏழுமலை பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த பத்து நாட்களாக இந்த குடிநீர் பழுப்பு நிறத்தில் கலங்கலாக வருகிறது. எனவே இதனை பயன்படுத்த முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வைகையில் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படும் குடிநீர் கலங்கலாக வருவது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் குடம் ரூ.12 க்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலையில் உள்ளனர். சுத்தமான குடிநீர் வழங்க வைகை குடிநீர் திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us