/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கைக்காக மதுரையில் பிப்.9ல் கருத்து கேட்பு; 6 மாவட்ட மக்கள் பங்கேற்கின்றனர்

ADDED : பிப் 03, 2024 05:52 AM
மதுரை ; லோக்சபா தேர்தலுக்காக அ.தி.மு.க., சார்பில் வெளியிடப்படவுள்ள தேர்தல் அறிக்கையில் என்னென்ன கருத்துகள் இடம் பெற வேண்டும் என மதுரை உட்பட 6 மாவட்ட மக்களிடம் பிப்.,9ல் கருத்து கேட்கப்படுகிறது.
உட்கட்சி பூசலுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவியை தக்க வைத்துள்ள பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., முதன்முறையாக லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளது. 2014 ல் ஜெயலலிதா அ.தி.மு.க.,பொதுச் செயலாளராக இருந்தபோது 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது போல், வரும் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன் தரப்பு ஓட்டுகளை பிரிக்கும் என்பதால் தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான கருத்துகளை சேர்க்க பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
இதற்காக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான கருத்து கேட்புக்குழு பிப்.,5 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட மக்களிடம் பிப்., 9 மாலை 4:00 மணிக்கு மதுரை தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. இதில் அனைத்து தரப்பினரும் மத்திய அரசிடம் இருந்து தேவைகள், எதிர்பார்ப்புகள் குறித்து தெரிவிக்கலாம்.