/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்களாவது... பிரச்னையாவது: மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காத தி.மு.க.,: கட்சிக்கூட்டம்தான் கவுன்சிலர்களுக்கு முக்கியமாம்
/
மக்களாவது... பிரச்னையாவது: மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காத தி.மு.க.,: கட்சிக்கூட்டம்தான் கவுன்சிலர்களுக்கு முக்கியமாம்
மக்களாவது... பிரச்னையாவது: மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காத தி.மு.க.,: கட்சிக்கூட்டம்தான் கவுன்சிலர்களுக்கு முக்கியமாம்
மக்களாவது... பிரச்னையாவது: மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காத தி.மு.க.,: கட்சிக்கூட்டம்தான் கவுன்சிலர்களுக்கு முக்கியமாம்
ADDED : ஆக 29, 2024 05:36 AM

மதுரை: மதுரையில் மாநகராட்சி கூட்டத்தில் மக்கள் பிரச்னையை பேச வேண்டிய தி.மு.க., கவுன்சிலர்கள் தங்கள் வருகை பதிவு செய்த அடுத்த நொடியே கட்சி கூட்டத்திற்கு கிளம்பி சென்றனர்.
மதுரையில் நகர் தி.மு.க., சார்பில் செயலாளர் தளபதி ஏற்பாடு செய்த பொது உறுப்பினர்கள் கூட்டமும், மேயர் இந்திராணி பொன்வசந்த் அறிவித்த மாநகராட்சி கவுன்சில் கூட்டமும் நேற்று ஒரே நாளில் 'போட்டிக் கூட்டம்' போல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் சம்பந்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட தி.மு.க., கவுன்சிலர்கள் எந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் காலை 10:30 மணிக்கு மேயர், கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் கூட்டம் துவங்கியது. அப்போது தி.மு.க., கவுன்சிலர்கள் இருக்கைகள் பல காலியாக இருந்தன. வருகை தந்திருந்த சில மண்டல தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள், கவுன்சிலர்களும் மேயர் பேச துவங்கியதும், தி.மு.க., கவுன்சிலர்கள் வெளியேறினர். அப்போது 'ஒட்டு போட்டு தேர்வு செய்ய மக்களுக்காக வார்டுகள் பிரச்னைகளை பேசுவதை தவிர்த்துவிட்டு கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க கிளம்பி விட்டார்களே' என அ.தி.மு.க.,வினர் கிண்டல் அடித்தனர். அமைச்சர் மூர்த்தி ஆதரவு தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்றனர். இதன் விவரம்
* வாசுகி, தலைவர், மண்டலம் 1: பலமுறை வலியுறுத்தியும் ஆனையூர் பகுதியில் கால்வாய்கள் துார்வாரப்படவில்லை. பாதாளச் சாக்கடை பணிகள் சரியாக நடக்கவில்லை. மண்டலத்தில் எந்த வேலையும் நடக்கவில்லை.
* சரவணபுவனேஸ்வரி, தலைவர் மண்டலம் 2: மழைக்காலம் என்பதால் கால்வாய் துார்வாருதல் உட்பட அவசர கால பணிகள் விரைவில் முடிக்க வேண்டும். 'மாமதுரை போற்றுவோம்' விழா நடந்த நிலையில், மாட்டுத்தாவணியில் கழிப்பறை இல்லை, விளக்கு இல்லை, துர்நாற்றம் வீசுகிறது. மழை நீர் தேங்குகிறது.
* மேயர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
* சுவிதா, தலைவர், மண்டலம் 3: அம்ரூத் திட்டப் பணியால் ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல ரோடுகளை தோண்டி குண்டும் குழியுமாக விட்டுச் சென்றுள்ளனர். பலமுறை வலியுறுத்தியும் ரோடுகளை சரிசெய்ய ஒப்பந்ததாரர்கள் வரவில்லை. நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மக்கள் பாதிக்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. வார்டுகள் பிரச்னை குறித்து தினமும் தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகின்றன (நாளிதழ் செய்திகளை மேயரிடம் ஒப்படைக்கிறார்). நிரந்தர தீர்வு என்ன.
* மேயர், வினோத்குமார், நகர் நல அலுவலர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நாள் ஒன்றுக்கு 25க்கும் மேல் பிடித்து கருத்தடை செய்யப்படுகின்றன.
* சோலைராஜா, அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர்: மாநகராட்சி எல்லைக்குள் 200 அலைபேசி டவர்கள் உள்ளன. மத்திய அரசு விதிப்படி உரிய வாடகை, வரி வசூல் செய்யப்படுகிறதா.
* கமிஷனர்: ரூ.15 ஆயிரம் வாடகை வசூலிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு விதிப்படி தேவையான டவர்களுக்கு கமர்ஷியல் வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
* சோலைராஜா: மாநகராட்சி பில் கலெக்டர்கள் ரூ.1.50 கோடி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தகுதியில்லாதவர்கள் பில் கலெக்டர்களாக ஏன் நியமிக்கப்பட்டனர். இந்த முறைகேட்டில் சில முக்கிய நபர்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. உரிய விசாரணை நடத்தப்படுமா.
* கமிஷனர்: நான்கு உதவி கமிஷனர்கள் குழு இம்முறைகேடு குறித்து விசாரிக்கிறது. அதன் அறிக்கை பெறப்பட்டு, அதன் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
* சோலைராஜா: நகரில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் ஜெயராஜ் குடும்பத்தில் 7 மாத குழந்தை (பேரன்) டெங்குவால் உயிரிழந்தது என்கின்றனர். சுகாதார குழு தலைவருக்கே இந்த நிலையா. பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் எப்போது வினியோகிக்கப்படும்.
* வினோத்குமார், நகர் நல அலுவலர்: டெங்கு பாதிப்பு கடந்தாண்டை விட மிகக்குறைவு. உயிரிழந்த குழந்தை டெங்குவால் பாதிக்கப்படவில்லை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படுகின்றன.
* ரூபன் சுரேஷ், முதன்மை பொறியாளர்: பெரியாறு கூட்டுக்குடிநீர் நகரில் பல்வேறு பகுதிகளில் மேல்நிலை தொட்டிகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நீர்க்கழிவு சோதனையும் முடிந்துள்ளது. அரசு துறைகளில் சில இடங்களில் அனுமதி பெற்று பணிகள் தொடர வேண்டியுள்ளது. 2 மாதங்களில் வினியோகம் துவங்கிவிடும்.
* கார்த்திகேயன், காங்.,: கோமதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதாளச்சாக்கடை பிரச்னை தீர்ந்தபாடில்லை. பலமுறை பேசியும் பயனில்லை. போராட்டம் நடத்தும் எண்ணம் ஏற்படுகிறது. கூட்டணி கட்சி என்பதால் தவிர்க்கிறோம். தார் ரோடுகள் அதிக இடங்களில் அமைக்கவில்லை. கே.கே.நகர் பகுதி பள்ளங்களாக உள்ளன. விபத்துகள் நடக்கின்றன.
* மேயர், கமிஷனர்: சிறப்பு கவனம் செலுத்தி பணிகள் விரைவுபடுத்தப்படும். நேரடி ஆய்வுக்கு வருகிறோம்.
* குமரவேல், மா. கம்யூ.,: மீனாட்சி கோயில் வரும் பக்தர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. தத்தனேரி மயானத்தில் 5 வாரமாக தண்ணீர் வசதி இல்லை. ஓராண்டுக்கு முன் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட ரோடுகள் தற்போது மோசமாகிவிட்டன. தரமான ரோடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பாபு, தி.மு.க.,: ஆனையூர் அகதிகள் முகாமில் நாய், மாடு, பன்றி தொல்லைகள் அதிகம். விடுபட்ட பாதாளச் சாக்கடை பணிகளை நிறைவு செய்ய வேண்டும். அமைச்சர் மூர்த்தி முயற்சியால் திட்டப் பணிகள் நடந்துள்ளன. வார்டு மேம்பாட்டு பணிக்கு மாநகராட்சி பொது நிதி ஒதுக்க வேண்டும். பொது நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
* கருப்பசாமி, அ.தி.மு.க.,: 72 வது வார்டு பகுதியில் 15 ஆண்டுகளாக ரோடு அமைக்கவில்லை. பைகாரா பகுதியில் முத்துராமலிங்கபுரம், திருவள்ளுவர் நகர் மெயின் வீதி உட்பட 160 ரோடுகளில் 14 ரோடுகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு விவாதம் நடந்தது.