/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க.,வினருக்கு நெல் கொள்முதல் மையம் கண்டித்து மக்கள் மறியல்
/
தி.மு.க.,வினருக்கு நெல் கொள்முதல் மையம் கண்டித்து மக்கள் மறியல்
தி.மு.க.,வினருக்கு நெல் கொள்முதல் மையம் கண்டித்து மக்கள் மறியல்
தி.மு.க.,வினருக்கு நெல் கொள்முதல் மையம் கண்டித்து மக்கள் மறியல்
ADDED : ஜூன் 25, 2025 03:20 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலத்தில் கிராமத்தினர் நடத்திய அரசு நேரடி கொள்முதல் மையத்தில் நெல் வாங்காமல், தி.மு.க., வினருக்கு ஒதுக்கிய மையத்தில் கொள்முதல் செய்வதை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 60 பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
இக்கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் நெல் கொள்முதல் மையத்தை கிராம மக்கள் இணைந்து நடத்திவருகின்றனர். இந்த ஆண்டு 10 ஆயிரம் சிப்பங்களுக்கு மேல் மையத்திற்கு வந்த நிலையில் 5 ஆயிரம் சிப்பங்கள் வரை கொள்முதல் செய்தனர். கடந்த வாரத்தில் இங்கு கொள்முதல் மையத்தை நிறுத்தி விட்டு அதே பகுதியில் தி.மு.க., வைச் சேர்ந்தவர்களுக்கு நெல்கொள்முதல் மையம் துவக்க அனுமதி வழங்கி அங்கே கொள்முதல் துவங்கியது.
இதைகண்டித்து கிராம மக்கள் நேற்று காலை மதுரை ---தேனி ரோட்டில் 20 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. 150 பேரை டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கிராமத்தினர் நடத்தும் கொள்முதல் மையத்திலும் நெல் கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.