/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஸ் வசதி வேண்டி காத்திருக்கும் மக்கள்
/
பஸ் வசதி வேண்டி காத்திருக்கும் மக்கள்
ADDED : மே 16, 2025 03:25 AM
சோழவந்தான்: சோழவந்தான் அருகே பொம்மன்பட்டியில் பஸ் வசதி வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி, கல்லுாரிக்கு செல்கின்றனர்.சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.
இவ்வாறு வெளியூர் செல்ல இவர்கள் ஒரு கி.மீ., தொலைவில் உள்ள மேல் நாச்சிகுளம் சென்று பஸ் ஏற வேண்டிய அவலம் உள்ளது.
தடம் எண் 54, 28 பஸ்கள் மேல் நாச்சிகுளம் வரை வருகின்றன.
பொம்மன்பட்டி வரை அதன் வழித்தடத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ''இங்கு பஸ் வசதி இல்லாதது வேதனையே. மாணவர்கள், நோயாளிகள் தினமும் 2 கி.மீ., நடந்து சென்று பஸ் ஏறுகின்றனர். போட்டி தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் சரியான நேரத்தில் செல்ல முடிவதில்லை. கடந்த ஐந்தாண்டுகளாக முதல்வரின் தனிப்பிரிவு, மதுரை கலெக்டர், போக்குவரத்து கழக அலுவலகம் என மனு அளிக்கப்பட்டுள்ளது.ஒருமுறை வெங்கடேசன் எம்.எல்.ஏ., பரிந்துரைபடி, 'உங்கள் ஊருக்கு பஸ் வரும்' என்று மண்டல மேலாளர் உறுதி அளித்ததால் நாங்களே போர்டு தயார் செய்து வைத்தோம்.இருப்பினும் பல காரணங்களைக் கூறி மறுத்துவிட்டனர். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.