ADDED : ஆக 16, 2026 07:41 PM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே எஸ். பெருமாள்பட்டி முத்தாலம்மன் கோயில் அருகே மணியக்காரர் தெருவில் 2 ஆண்டுகளாக புதிய மின் கம்பத்தில் ஒயர்களை மாற்றாமல் மின்வாரியம் அலட்சியம் காட்டுகிறது.
அப்பகுதி சுரேந்தர் கூறியதாவது: எங்கள் தெருவில் 2 ஆண்டுகளுக்கு முன் 2 மின் கம்பங்களின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழும் அபாயம் ஏற்பட்டது. இந்த மின் கம்பங்களை மாற்ற பல முறை கோரிக்கை வைத்த பின் 2 மின் கம்பங்கள் நடப்பட்டன.
அதில் ஒரு மின் கம்பத்தில் இருந்த ஒயர்களை மட்டுமே மாற்றி உள்ளனர். பழுதடைந்த மின் கம்பம் அகற்றப்பட்டது.
மற்றொரு புதிய மின் கம்பத்தில் ஒயர்கள் மாற்றப்படாமல் உள்ளது. புதிய மின் கம்பம் உயரமாகவும், பழுதான கம்பம் உயரம் குறைவாகவும் உள்ளது. பழுதான மின்கம்பத்தின் அடிப்பகுதி வலுவிழந்து உள்ளது. எப்போதும் விழலாம் என்பதால் நாங்கள் அச்சத்துடன் வசிக்கிறோம். மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
