/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் சின்ன உடைப்பு மக்கள் போராட்டம்
/
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் சின்ன உடைப்பு மக்கள் போராட்டம்
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் சின்ன உடைப்பு மக்கள் போராட்டம்
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் சின்ன உடைப்பு மக்கள் போராட்டம்
ADDED : நவ 19, 2024 05:40 AM
அவனியாபுரம்: மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு பகுதியில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் 5வது நாளாக மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விமான நிலைய 'ரன்வே'க்காக 6 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. அதில் சின்ன உடைப்பும் ஒன்று. அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொடர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஊரின் நுழைவு வாயிலில் பந்தல் அமைத்து குழந்தைகளுடன் தங்கி உணவு சமைத்து சாப்பிடுகின்றனர்.
நேற்றும் கிராமத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டத்துடன், அங்குள்ள நடுநிலைப்பள்ளிக்கும், வெளியில் சென்று பள்ளி, கல்லுாரியில் படிக்கும் அவர்களது பிள்ளைகளை அனுப்ப மறுத்து அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
சின்ன உடைப்பு நடுநிலைப் பள்ளியில் அருகிலுள்ள ஊர்களில் இருந்துவரும் குழந்தைகளை பள்ளிக்குச் செல்ல அவர்கள் தடை செய்யாமல் வழிவிட்டனர்.