/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அனுமதியின்றி செயல்படும் 3 ஆயிரம் மழலையர் பள்ளிகள்; நடவடிக்கை எடுக்க 'பெப்சா' வலியுறுத்தல்

ADDED : செப் 25, 2024 04:21 AM
மதுரை : தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மழலையர் (பிளே ஸ்கூல்) பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு (பெப்சா) மாநில தலைவர் ஆறுமுகம் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
மாநிலத்தில் செயல்படும் மழலையர் பள்ளிகளில் 90 சதவீதம் பள்ளிகள் எவ்வித அங்கீகாரமும் இன்றி செயல்படுகின்றன. இவை பள்ளி கல்வித்துறையிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என மழலையர் ஒழுங்குமுறைப்படுத்துதல் திருத்த சட்டம், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பெரும்பாலான பள்ளிகள் வீடுகளிலும், நெரிசல் மிகுந்த குடியிருப்பு பகுதிகளிலும் பாதுகாப்பு இன்றி செயல்படுகின்றன. உரிய கட்டட வசதி, வகுப்பறைகள், சுகாதார வசதிகள் இருப்பதில்லை. அடிப்படை வசதிகள் மேற்கொள்வதில் தனிக்கவனம் செலுத்துவதில்லை. ஆனால் ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
இந்நிலையில் வழக்கு ஒன்றில் மழலையர் பள்ளிகள் சமூகநலத் துறையின் கீழ் தான் வரும் எனக் கூறிய நீதிமன்றம், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்ட விதிக்கு இடைக்கால தடைவித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே பல ஆண்டுகளாக அங்கீகாரம் இன்றி செயல்படும் வீதிமிறல் பள்ளிகளால், உரிய அங்கீகாரத்துடன் அனைத்து வசதிகளுடன் இயங்கும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிக்கிறது.எனவே மழலையர் பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடி, அங்கு படிக்கும் மாணவர்களை அருகே உள்ள பள்ளிகளில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.