/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த 'பெரா' அமைப்பு நிர்வாகிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி
/
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த 'பெரா' அமைப்பு நிர்வாகிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த 'பெரா' அமைப்பு நிர்வாகிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த 'பெரா' அமைப்பு நிர்வாகிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி
ADDED : ஜூலை 05, 2025 06:12 AM
மதுரை: 'முதல்வர் ஸ்டாலினை சந்தித்த 'பெரா' கூட்டமைப்பினர், தங்கள் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர்.
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பில் (பெரா) வருவாய், நிலஅளவைத்துறையை சார்ந்த 5 சங்கங்கள் இணைந்துள்ளன. வருவாய்த்துறைக்கே உரிய கோரிக்கைகளை இந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து இவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முருகையன், பூபதி, குமார், அண்ணாகுபேரன், ரவி ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.
அவரிடம் வருவாய்த்துறை செயல்பாடுகளை எடுத்துக் கூறியவர்கள் 7 அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தனர். அதுகுறித்த மனுவில் ''உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்டம், நகர்ப்புற அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கும் திட்டம் உள்ளிட்ட பணிகளில் இரவு பகலாக பணியாற்றுகிறோம்.
மகளிர் உரிமைத் தொகை, உங்களைத் தேடி உங்கள் ஊரில் உள்ளிட்ட திட்டங்களை மக்களிடம் சேர்ப்பதில் வருவாய்த்துறை பங்களிப்பு அளப்பரியது. அரசு இயந்திரத்தின் அச்சாணியான வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
வருவாய்த்துறையில் சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து நிலை காலியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். மனஅழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை தவிர்த்து, அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட தனிஊதியம் வழங்க வேண்டும்.
வாரிசு அடிப்படையில் பணிநியமனத்தை 5 சதவீதமாக குறைத்ததை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். அனைத்து நிலைகளிலும் அவுட்சோர்ஸிங் அடிப்படையில் பணியமர்த்தக் கூடாது. ஜூலை 1 ம்தேதியை 'வருவாய்த்துறை தினம்' என அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இக்கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற முதல்வர் தங்களிடம் உறுதியளித்ததாக நிர்வாகிகள் கூறினர்.